அன்னை
![](https://eluthu.com/images/loading.gif)
தந்தை அடித்தால்
தாயிடம் அடைக்கலம் புகுந்தேன்!
தாய் அடித்தால்
ஏனோ அவளிடமே ஆறுதல் தேடினேன்!
சேட்டை செய்தால் கண்டிப்பாள் என தெரிந்தும் செய்தேன்!
ஏன் தெரியுமா?
அடியுடன் கொஞ்சல்களும் கிடைக்குமென!
எனக்கு வலிக்குமென மெல்லமாய் அவள் அடிக்க,
எங்கே அழவில்லையெனில் - அவளின் அரவணைப்புக்கிட்டாதென பயந்து அழுதேன்!