காதல்

அந்திசாயும் வேளை கோடை வெப்ப
கோரம் இன்னும் தணியவில்லை
கடற்கரை வந்தடைந்தேன் மணலில்
காலை வைத்தேன் மணலும் சுட்டது
வாடைக்காற்று வீசினும் வெப்பம் அதில்
தணியாது உடலில் பட்டு துன்பம் தந்து போனது
கோடையில் கடற்கரை காற்றுதான் இப்படி என்றால்
காத்திருந்து கன்னிமயில் காதலியும் வாராது
இதயம் ஏக்கத்தில் நொறுங்கியது -அப்போது
குறவஞ்சி ஒருத்தி வந்தாள் கையில் கோல் ஏந்தி,
மாயக்கோல் அது, குறமகள் அவள் தொழுதிடும்
தெய்வத்துணையால் அருள் வாக்கு நல்கிடும்
அவள் குறிபார்ப்பவர் கைரேகைகள்மேல் பட்டு,
'டயம்பாஸ்' என்றெண்ணி அவளிடம் கையைக்
காட்ட, அவள் சொன்னாள்.' யாருக்கு காத்திருக்கிறீரோ
அவள் நாளை வருவாள் உமக்கு கைதந்து
புகழின் உச்சிக்கு கொண்டுசெல்வாள் அவளே,
காத்திருக்க பொறுமையுடன் அவள் வரவிற்கு
என்றாளே,' ஏக்கத்தில் ஏங்கிய இதயம் குளிர்ந்து
மகிழ்ச்சியில் மிதக்க , குறவஞ்சி கையில்
ஐம்பது ரூபாய் வைத்து அனுப்பிவிட்டேன்
இரவு வந்தது, நிலவும் வந்தது
முழுநிலவில் தென்றல் என்னைத் தாலாட்ட
சிறு தூக்கம் ……. கனவில் என்னவள் …..
'சுண்டல், சூடான சுண்டல் ...மாங்காய் தேங்காய்
பட்டாணி சுண்டல்' என்ற பையனின் குரலில்
விழித்துக்கொண்டேன்… கனவும் கலைய
நடை கட்டினேன் வீடு நோக்கி நாளை நினைவில்
காதலி அவள் வரவை எண்ணி ,,,,குறத்தி வாக்கு
பலித்திட குமரனை வேண்டி….

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (3-Jul-19, 5:57 pm)
Tanglish : kaadhal
பார்வை : 297

மேலே