நீ தொட்டவுடன் ஓடிவிடும்

கண்ணிலே காந்தம் வைச்சு
காணும் என்னை இழுக்கிற

கல கலவென சிரித்து வைச்சு
காதல் ஆசையைக் கூட்டுற

உனைக்காணும் போதெல்லாம்
உலகை மறக்கச் செய்யுற

கட்டிப் பனிக்கட்டியில
ஒட்டிக் கொண்ட இனிப்பாய்

கட்டி என்னுள் போட்டுவிட்டேன்
கட்டழகு கரும்பே

தத்தி தாவி ஓடி வந்து - என்னை
கட்டிக் கொள்ளு அரும்பே

நீ தொட்டவுடன் ஓடிவிடும்
துன்பம் விலகி பறந்தே.
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (3-Jul-19, 7:13 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 67

மேலே