அவள்
சிறுமையிலே அனுபவங்களின் தொகுப்பை ஒட்டுமொத்தமாய் அள்ளிக் கொண்டவள்..!
காதற்கனவுகள், என எல்லா பெண்மைபோல இளமைக்கால கனவுகளுக்கு இடம் தராமல் நீண்ட அவள் பயணங்கள் இலட்சியப் பாதைகளின் தேடலில் மட்டுமே..!
ஒவ்வொரு சாதிக்க எண்ணிய கணங்களையும் சிதைக்கப்பட்ட சூழ்நிலைகள் சிறைபிடிக்க..,
பெண்மை எனும் நூற்பாவை நூழிலைக்குள் கட்டப்பட்டு தத்தளிக்க.., அவள் தூரதேசக் கனவுகள் கடலோர காற்றில் அடித்துச் செல்லப்பட்ட மணல் துகள்களாய்..!
தொடக்கமறியா தெருவோரத் தளிர்களாய்..,
அவள் சாதனைக் கனவுகள்..!