ஒரு முறை முயற்சிப்போம்

தமிழ் மொழிச் செழித்து எங்கும் பெருக
தமிழரான நாம் தான் செய்தது என்ன

ஐவகை நிலமும் ஐம்பெரும் நூலும்
அடுத்தத் தலைமுறை செழிக்கச் செய்யுமோ

அறிவியல் கண்டுபிடிப்பை அழகுற செய்து
அதனைத் தமிழால் அச்சுப் பதிப்பிப்போம்

அனைத்து மொழியையும் அதன் போக்கில் கற்று
சிறந்ததைக் கொண்டு செம்மொழியை ஏற்றுவோம்

அகிலம் செல்லும் வழியில் கற்று - அனைத்து
அற்புதங்களையும் அருந்தமிழில் புகுந்துவோம்

மேலோட்ட செய்திகளை விலக்கி வைப்போம்
மேன்மையான உண்மையை தமிழில் செய்வோம்

தமிழைப் பற்றி தரமான விமர்சனத்தை வரவேற்போம்
தமிழில் தரமில்லா கருத்தை களைந்திடுவோம்

செய்திடுவோம் இச்செயலை சிறப்புறவே
செந்தமிழும் உலகாளும் நயமுடனே.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (11-Jul-19, 8:21 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 184

மேலே