கதவுகள்

குடும்ப உறவுகளின் வரலாறுகள்
ரகசியமாய் அறிந்துள்ளன
வரவேற்கும் வாசற்கதவுகள்.
*
மழைத்துளிகள் பட்டுப் பட்டு
அதிர்ந்தக் கணப்பொழுதில்
உதிர்ந்தன மலர்ந்தப் பூக்கள்.
*
பாதையோரம் பூத்துக்குலுங்கும்
வண்ணவண்ணப் பூக்களே
உங்களைச் சுற்றிலும் புழுதி.

எழுதியவர் : ந க துறைவன். (26-Jul-19, 10:46 am)
சேர்த்தது : Thuraivan N G
பார்வை : 60

மேலே