நாய் பேசுகிறது
செய்நன்றி மறப்போர்
இதயம் இல்லாதோர்
இலஞ்சம் வங்குவோர்க்கு
மட்டும் நாய் சொல்கிறது
நான்
நாய் பேசுகிறேன்
நன்றி கெட்ட சில
மனிதர்களை மட்டும்
ஏசுகிறேன்
நான்
ஒரு பொறை
தந்தால் அவர் பின்னால்
காலம் முழுதும் செல்கிறேன்
மனிதனோ
ஒரு பொறை கொடுத்தால்
பெரிய பொறை தந்துவிட்டார்
என குறை சொல்கிறான்
நான்
நாக்கைத் தொங்கவிட்டு
அலைகிறேன் என்
வயிற்றுப்பசிக்கு
நீங்கள்
ஏன் அலைகிறீர்
உங்கள் உடல் பசிக்கு
நான் உங்கள்
ஊர் அரசியல்வாதிகளைப்போல்
முடியாது இயலாது
வீட்டில் இல்லை என்று
சொல்வதில்லை
நீங்கள் விரட்டாமல்
உங்களைவிட்டு
செல்வதில்லை
நான்
கடிப்பேன்
உங்களைப்போல்
நடிக்கமாட்டேன்
உங்களுக்கு இல்லாத
நன்றி என்ற குணம்
என்னிடம் உள்ளது
என்னை உன்னோடு
ஒப்பிடவே எனக்கு
அருவருப்பாய் உள்ளது
நான் வெளி
நாய்களை என் தெருவில்
அனுமதிப்பதில்லை
நீயோ உன் தெருவிலே
சண்டையிடுகிறாய்
நான் காவல் காக்கிறேன்
உன்னைப்போல்
காவல் காப்பதற்கு
இலஞ்சம் வாங்குவதில்லை
ஏழைகள்
தூக்கிப்போடும்
எலும்பைச் சாப்பிடுவேன்
உன்னைப்போல்
ஏழைகளின் வயிற்ருணவை
உண்ணமாட்டேன்
ஒரு வேளை சோறு போடும்
அனைவரையும் எஜமானாகப்
பார்க்கிறேன்
உன்னைப்போல் எஜமானை
யாரோ போல் பார்த்ததில்லை
உன்னைப்போல்
இதயத்தைக் கழற்றி
வீட்டில் வைத்துவிட்டு
சட்டையை அணிந்து
செல்வதற்கு
நான் இப்படி
இருப்பதே பெருமை
நாயின் அறிவுரை
கேட்டாவது திருந்துங்கள்
நன்றி கெட்ட இதயம்
இல்லாத லஞ்சம் வாங்கும்
நாயோடு ஒப்பிட
தகுதியற்ற
சில மனிதப் பதர்களே