வர்தா

டேய் வரதராசு எங்கடா இருக்கிற? உன்னைப் பார்த்து ஆறு மாசம் ஆகுதடா?
@@###
டேய் பொன்னப்பா, நான் எப்ப வடக்கே வேலைக்கு போனேனோ அப்பவே எம் பேர சுருக்கமா மாத்திட்டேன். அங்க இருக்கிற இந்தி ஆசாமிகளால எம் பேரச் சரியா உச்சரிக்க முடியல. இந்தக் காலத்தில சுருக்கமான பேருக்குத்தான்டா மதிப்பு.
@@@@@
அதனால...
@@@@@
அதனால எம் பேரை 'வர்தா'ன்னு மாத்திட்டன்டா.
@@#@#
எனக்கும் வடக்க வேலை கெடச்சிருக்கு. அடுத்த மாசம் வேலைல சேரச்சொல்லி உத்தரவு வந்திருக்குது. 'பொன்னப்பன்'ங்கிற எம் பேரை எப்பிடிடா மாத்தறது?
@@###
அதென்னடா பெரிய விசயம். அங்க வந்தா நீ 'போன்பா' ஆகிடுவே..நல்ல பேருதான்டா 'போன்பா'.
■■■◆■■◆◆◆◆◆■■■■■■■■■■■◆
Vardha = augmented by glory.

எழுதியவர் : மலர் (17-Aug-19, 1:46 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 61

மேலே