பொருந்தாத ஜாதகம் !

விழிகளில் வந்தவள்
வழியில் விட்டுச் செல்ல

இரு நொடிகளில் பிரித்திட
இதயத்தில் இடி வந்து மின்னிச் செல்ல ...

சரளமாய் கதை பேசி..
பின் கண்களால் வசை பாடி

இன்று பிறந்த காதலுக்கு அதற்குள்
ஈமைக் கிரியைகள் செய்ய வந்த அவசியம் தான் என்ன ?

பாதகன் நான் என்றிருந்தால் படி இறங்கி போயிருப்பேன்
ஜாதகத்தின் மேல் பலி சொல்கிறாய் - வெறும் வாய்க்கு அவல் கிடைத்தாட் போல் வேறேதும்
இல்லாததால்

இலக்கணத் தவறெனில் திருத்தி
அமைத்திடலாம் - உன்
தலைக்கணத் தவறிதை எது
கொண்டு சீராக்க ?

- நிஷான் சுந்தரராஜா -

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (8-Sep-11, 1:39 pm)
சேர்த்தது : Nishan Sundararajah
பார்வை : 836

மேலே