அழகியல் அதிகாரம் சொர்கத்துத் தேவதையே

கண்ணிமைகள் மெல்லக் கவிந்திடும் புன்னகைப்
பூமலரும் புத்தக மே !

செந்தமிழ்ச் சொல்லெடுத்து அந்தி எழுதிய
செந்தளிர்சொல் லோவிய மே !

வேய்ங்குழல் மென்னிதழில் வைத்து இசைத்திடும்
கார்க்குழல் பூபாள மே !

வண்ணத்தில் வானவில் சொல்லில்த மிழ்தோற்கும்
சொர்கத்துத் தேவதை யே !

பூப்பூத்தால் தோட்டம்உன் புன்னகை பூத்தாலோ
என்கவிதைக் குக்கொண்டாட் டம்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Aug-19, 11:12 am)
பார்வை : 102

சிறந்த கவிதைகள்

மேலே