மண்ணில் சிறந்தது

மண்ணில் சிறந்தது என் நாடு
மாண்புகள் கொண்டது இந்நாடு
மதிப்பானோர் பிறந்த பொன்னாடு
மறுபடியும் பிறக்க தோன்றும் நாடு

மயக்கும் மொழி பல கொண்ட நாடு
மகத்துவத்தை உலகிற்கு தந்த நாடு
மனோபலத்தை மற்றோருக்கு உரைத்த நாடு
மாவீரர்களால் எழுச்சிக் கண்ட நாடு

அரிய கலைகளை உருவாக்கிய நாடு
அதனால் இன்னல்கள் கொண்ட நாடு
ஆதியில் கோள்களை ஆராய்ந்த நாடு
ஆன்மீகத்தை அனைவருக்கும் தந்த நாடு

பகுத்துக் கொடுத்து பழகிய நாடு
பகுத்தறிவு செறிவால் உயர்ந்த நாடு
பல வகை நிலங்களை கொண்ட நாடு
பண்டிதர்களை உருவாக்கி மகிழும் நாடு

நெடிய பாரம்பரியம் உடைய நாடு
நாடியோருக்கு நினைத்ததைத் தந்த நாடு
நதிகளை புனிதமாய் போற்றும் நாடு
நாற்புரம் இயற்கை அரண் பெற்ற நாடு

அரசர்களின் ஆட்சியால் சிறந்த நாடு
அந்நியர் ஆட்சிக்கும் அகப்பட்ட நாடு
ஆற்றலானோரால் விடுத்துக் கொண்ட நாடு
அப்பா அம்மாவுக்கு இணையான நாடு

கிழக்கின் தங்கம் என்பது என் நாடு
கிழப்பருவம் எய்தா நூல்கள் கொண்ட நாடு
மூலிகையால் மருத்துவம் சொன்ன நாடு
மூவாயிரம் ஆண்டுக்கு முன்பே பிறந்த தமிழ் நாடு
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (29-Aug-19, 6:32 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : mannil siranthathu
பார்வை : 50

மேலே