தேவதை
அ என்ற முதலெழுத்தின்
பொருளானவளே....!
ஆயிரம் சொந்தமதில்
முதல் உறவானவளே.....!
மண்ணில் கலந்த மழை போல்
என்னில் கலந்து உயிரானவளே....!
என் சோகம் துடைக்கும்
விரலானவளே......!
என் வாழ்வின் கலங்கரை
விளக்கானவளே.....!
என் அன்பின்
அமுத சுரபியே.....!
என் மகிழ்ச்சியின்
அட்சய பாத்திரமே.......!
என் அழகு தேவதை
அம்மா.....!