வெட்கமா துக்கமா
மொட்டு அவிழ்த்த மெட்டு
இசைத்து
காற்றினிலே விட்டதூது
கவர்ந்து வரும் காதலனை
என்று
இதழ் விரித்து காத்திருக்க
காதலின்றி வந்து முத்தமிட்டு
தேன்குடித்து போன வண்டு
சொல்லிவிட்டு போனது என்ன
உள்ளுக்குள்ளே குமைந்து
அந்த
பொல்லாத ரகசியத்தை நீ
சுமந்து
தலைகவிழ்ந்து நிற்கும் காரணம்
வெட்கமா துக்கமா..,