காதல்
கண் தரும் பார்வை பார்வையில்
காதல் வந்தது காதலைக் காண
கண்ணால் முடியவில்லை அது ஏன்
காதல் உள்ளத்துக்குள் சென்று உறைந்தது
காதல் உணர்வானது
தித்திப்பு, கசப்பு, துவர்ப்பு என்று
பல்சுவைகள் நாவிற்கு தெரியும் நாம்
இவற்றை உணர்ந்தும் பார்க்க முடிவதில்லை
இப்படித்தான் பார்க்க முடிந்த சிலவற்றை
உணரவும் முடியும் சிலவற்றை உணரமட்டுமே
முடியும் பார்க்க முடிவதில்லை காதலைப்போல்