உன் பெயரும் தெரியாமல்
அதிகாலையில் பூத்த கதிராய்
என்னை கடந்த அவளின் பாதம்
வெற்றிடம் பதிந்த என் மனதில்
உந்தன் வருகை அதனை நிறைத்தது
சிறகுகள் முளைத்த சிறு பறவையாய் திரிந்தவன்
உன் ஒரு நொடி பார்வை கைதியாக்கியது
அருவியில் நனைந்து தென்றலில் உறங்கி
செளிர்ந்து நின்றேன் உன்னை கடக்கும் போது
என் மனதை உழுது விதைத்த உன் நினைவுகள்
அரும்பியதே காதல் முலையாய் இன்று
உன் பெயரும் அறியாது!