சந்திராயன் - 2ஐ சரி செய்ய
அனுப்பி வைப்போமா வாலி மைந்தன்
ஆஞ்சநேயனை ஆராய்ச்சி செய்ய
அப்புலிக்கு
அங்கு தானே அசைய முடியாமல்
சந்திராயன் - 2 ஏவுகணை
சரிந்து கிடக்கிறான் சரியானவர் இன்றி
ஏசுவை உடலில் புகுத்தி
மனிதனை மாண்புப்படுத்தும்
மகத்துவமானவரையேனும் அனுப்புவோமா அங்கு
ஐந்து வேளை தொழுது
அனைவரினும் மேம்பட்டோரை அனுப்பி
ஆர்ப்பரிக்க செய்வோமா சந்திராயன் - 2 ஐ
திக்கையே ஆடையாக்கியோரின்
தீரத்தை வெளிப்படுத்தி
திக்கின்றி கிடக்கும் கணையை சீர் செய்வோமா
ஆசையை வெறுத்து
அகிம்சை போதிப்போரையாவது அழைத்துச் சென்று
அங்கு அறிவியலுக்கு சவால் விட்டு வெல்வோமா
நோக்கு வர்மம் தொடா சிகிச்சை
குண்டலினி யோகம் சீவ சமாதி கொள்ளும்
குழுவை அனுப்பி சந்திராயன் - 2 குழப்பம் தீர்ப்போமா
எவ்வளவு செலவால் ஆன ஏவுகணை
யாருமின்றி இயங்கா நிலையில் அங்கு
எல்லா திறமையானவரும் இங்கு
அரசு தான் முடிவெடுக்கணும் இறுதியாய்.
---- நன்னாடன்.