மார்கழி காலை வேளை
புலராப் பொழுது
அலரா தாமரை
கூரை மேலிருந்து
கூவும் சாமக்கோழி
கதிரவனே எழுக
என சுப்ரபாதம்
இசைக்கும் சோலைக்குயில்
இலைகளின்மேல் சொட்டும்
பனித்துளிகள் ......
'மார்கழித்த திங்கள்
மதிநிறைந்த நன்னாளால்'
மாலவன் கோயிலிலிருந்து
கேட்கும் குழந்தைகளின்
கோஷ்டி திருப்பாவை கீதம்
தெய்வீக மணம் கமழும்
மார்கழி மாத இனிய
அதி காலை வேளை