காதல்
காதலைத்தேடி அலைந்திடலாம்
திரவியம் தேடுவது போல்
வாழ்விற்கு காதல் அத்தியாவசியம்
காதல் அன்பு சேர்ப்பது
காதல் அன்பு....
எது காதல் என்று தெரியாது
அலைவதுதான் அறியாமை
மோகமும், காமமும் காதலுக்கு
வழிகாட்டும் வாசல்கள் '''
ஆனால் இந்த வாசல்களைத் தாண்டினால்
மட்டுமே காதல் தெரிய வரும் -காதல்
அது இதயத்தில் வீற்றிருக்கும் தெய்வம்
இதைத்தான் நம் நாட்டு
குஜுராஹோ...அஜந்தா, எல்லோரா
ஹம்பி, ஹலேபேடு சிற்பங்கள்
கோயில் சிற்பங்கள் பறை சாற்றுகின்றன
மேலாக சிற்பங்கள் பார்த்து , எதையோ
ரசித்துவிட்டு.... கர்பகிரகத்தில்
வீற்றிருக்கும் .'அன்பை' காணாமல் போயின்
அது யார் குற்றம் .....
காதலைத் தேடலாம்..... .
அடைவது அவ்வளவு சுலபமல்ல
காதல் அன்பு