அவள்♥️

அவள்.....♥️♥️

பிரம்மன் ஆசையாய் வடிவமைத்த ஆக பெரிய அதிசியம்.

சிற்பி ஆர்வத்துடன் செதுகிய அழகிய சிலை.

கவிஞன் கற்பனையின் உச்சம் தொட்டு எழுதிய சிறந்த கவிதை.

ஓவியன் நுட்பத்துடன் தீட்டிய அழகோவியம், வண்ண களஞ்சியம்.

இசைவேந்தன் ரசித்து, ருசித்து மெட்டு அமைத்த இனிய பாடல் .

வானம் தீட்டிய வண்ணமயமான வானவில்.

மழைமேகம் காற்றில் கலைந்து, சிலாகித்து, தூவும் தூறல் அல்ல சாறல் மழை .

கானகத்தில் ஆனந்தமாக தோகை விரித்து நடனம் ஆடும் அழகிய மயில்.

சோலையில் அதிகாலை மரக்கிளைகளில் அமர்ந்து ஆத்ம ராகம் எழுப்பும் கூவும் குயில்.

மாலையில் மனதிற்கும், உடலிற்கும் இதமான வீசும் மெல்லிய தென்றல்.

வானத்து நட்சத்திரங்களின் ஒட்டுமொத்த அணி வகுப்பு .

அமைதியாக நடந்து வந்து என்னை தூக்கத்தில் இருந்து எழுப்பும் எழிலான குளிர் நிலவு.
- பாலு.

எழுதியவர் : பாலு (9-Nov-19, 9:47 am)
சேர்த்தது : balu
பார்வை : 269

மேலே