அவள்,நான், தென்றல்

இது என்ன சித்து வித்தை....
அதோ அவள்....அங்கு
நான் பார்த்தும் என்னைக் காணாததுபோல்
இருக்கிறாளே ..... என்று நான் நினைக்க
இதோ என்னை வந்து மெல்ல அணைக்கின்றாளே
இது எப்படி சாத்தியம்....
அதோ அவள் அங்கு.... இன்னும் நிற்கின்றாள்
என்னைக்கண்டும் காணாததுபோல ....

ஐயோ.... நீ காண்பது அவள் அல்ல
இதோ இதோ நான்தானே தென்றல்...
உன் நண்பன் தென்றல் காற்று ..
உன் நிலைக்கு கண்டு வருந்தி
ஓடி வந்தேன் உன்னை தொட்டு
ஆறுதல் சொல்ல. ....... என்றது

அவள் அங்கே , இன்னும் என்னை
பார்க்கவே இல்லை
என்னைத் தொட்ட தென்றலும் போனது

நான் மட்டும் தனியே இங்கே

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (10-Nov-19, 8:27 pm)
பார்வை : 200

மேலே