பூ அவள் பூவை
தொட்டால் மலரும்
பூக்களின் மொட்டுக்கள்
தொட்டபின் வாடிவிடும்
தொட்டவன் கைகளில்
தொடாமல் மொட்டின் அழகை
ரசித்தாலும் பார்வைப் பட்டு
மலரும் பூ ..... அப்பாவிப் பூ
பார்வையாலே வாடிவிடும் பிறகு
மலர மலர இவன் ரசிப்பான்
அதன் அழகை.... காய்ந்து
வாடினாலோ, இவன் தொடுவதில்லை
பார்ப்பதும் இல்லை ..............
பாவம் அப்பாவிப் பூ.....
பூமலராள்..... பாவை அவள் !