காதல்

அன்பே ஆருயிரே
என் மீது நீ கொண்ட இந்த காதலுக்கு
அளவேதும் உண்டோ உன் எண்ணத்தில்
என்று கேட்டாள் அவள் ,அதற்கு அவன்,
' என் கனவிலும் நீ நெனவிலும் நீ
என் கற்பனையிலும் நீ - இன்னும்
நான் காணும் பொருளிலெல்லாம் நீயே,
என்றிருக்க , உன்மீது எனக்கு
அளவில்லா காதலடி என்றே கூறுவேன் ........' என்றான்
ஆமாம் ......என்னவளே , என் மீது
உனக்கு எவ்வளவு காதல் என்று
அவன் அவளைக் கேட்க , அவள்' என்னையே
உன்னிடம் கொடுத்துவிட்டப் பின்
இன்னும் எவ்வளவு என்று கேட்டால்
என்னென்பேன் நான் நீயே சொல்வாய் 'என்றாள்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (7-Dec-19, 1:59 pm)
Tanglish : kaadhal
பார்வை : 157

மேலே