நித்திரை தொலைந்ததடி நிலவே

சித்திரைப் பௌர்ணமியென
உந்தன் முகம்./
காட்டிக் கொடுத்தது எந்தன்
விழி./

கண்டு மயங்கியது எனது
மனம்./
திருமணம் என்னும் முத்திரை
பதித்து./

திருமதி உன்னை அருகினில்
அணைத்து./
சிதறிய நட்சத்திரம் பார்த்து
ரசித்து./

நச்சென இச்சுக் கொடுக்கும்
எண்ணங்களால்/
தினமும் நித்திரை
தொலைகின்றதடி நிலவே./

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (14-Dec-19, 11:22 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 41

மேலே