பாரதி விருத்தம் - பாரதி கண்ணில் பார்த்தேன்

உறவென எளியோர் தம்மைப்
புரந்திடும் உணர்வைப் பார்த்தேன்!
பிறரிடர் கண்ட போது
பதைத்திடும் பரிவைப் பார்த்தேன்!
துறவியர் போலத் தன்னை
மறந்திடும் துணிவைப் பார்த்தேன்!
அறம்வளர் அன்பைப் பார்த்தேன்!
பாரதி கண்ணில் அம்மா!

எழுதியவர் : ஆனந்த் இராமானுசம் (24-Dec-19, 6:18 am)
சேர்த்தது : இமயவரம்பன்
பார்வை : 96

மேலே