உயிறே ஏன் உருக்கம்❤

பனிமுகத்தில் கண்ணீர் கீறல் கூடுமா?
உயிர் சுவரில் ஏக்கப் பாசிகள் ஆகுமா?
என் கணவனே நீ கலைய கூடாது
வாழ்விலே நீ வழுக்க கூடாது
என் அன்பே....


தயக்கம் ஏன் நானும்
தாய் மடி தானடா..
குறுக்கம் ஏன்
துன்பம் துரத்தும் துணைவி தானடா...
தோளை தட்டி மார்பில் ஒட்ட
நான் இல்லையா?
இதயம் கழுவி காதல்
பூச நான் இல்லையா?
ஆண்மை இருட்டானால்
பெண்மை விளக்காகும்
நீ தலைசாய் அன்பே...




காலம் கசையடி போடட்டும்
காயம் துடைக்கும் மருந்தாகுவேன்
கனவின் கால்கள் முறியட்டும்
வழி தேடும் தடியாகுவேன்
இரு உடல் கோர்வைகளை
ஒரு உயிரில் கோர்பேனே
ஒரு மூச்சும் வீனாகாமல்
விழிகளில் அடைத்து கொள்வேனே
என் அன்பே.....
ஆண்மை இருட்டானால்
பெண்மை விளக்காகும்
நீ தலைசாய் அன்பே...

பனிமுகத்தில் கண்ணீர் கீறல் கூடுமா?
உயிர் சுவரில் ஏக்கப் பாசிகள் ஆகுமா?
என் கணவனே நீ கலைய கூடாது
வாழ்விலே நீ வழுக்க கூடாது

(இஷான்)

எழுதியவர் : இஷான் (25-Jan-20, 11:51 pm)
சேர்த்தது : இஷான்
பார்வை : 67

மேலே