நினைப்பாயே நீ,

புனலுடை யணிகிற நதிமக லிடையொடு
புதைகிற மணலள விடுவோமே.
வனமுலை யமுதென வருகிற சலமது
வழிகிற வழிகளைக் கெடுப்போமே.
சினமுள கழுகெனச் சிதைத்துண கதிரவச்
சிறகுக ளடிபடச் சிரிப்போமே.
அனலிடு புழுவென அவனியி லுழவொரு
அவலமு மணுகிடத் தவிப்போமே.
*
அறுபட வுளதென அடிக்கடி நினைத்ததும்
அடவியில் மரங்களை யரியாதே!
நறுமண மலரொடு நதிக்கரை யழகென
நலமுள வகைதரு மறவாதே!
சிறுமதி யொடுவுள சுயநல மதுவிடு
சிதவுறு வனமது செழித்தாலே
பெறுமதி மிகவுள பிறவியை பயனுற
பெருவன மிடுமென நினைப்பாயே!
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (31-Jan-20, 1:56 am)
பார்வை : 575

மேலே