தென்றல் புகுந்துலவும் திரு”க்கிடந்த, ஊர்
கலிவிருத்தம்
(மா காய் காய் காய்)
முன்றில் இளங்கமுகின் முதுபாளை மதுவளைந்து
தென்றல் புகுந்துலவும் திரு”க்கிடந்த, ஊர்களெலாம்
பன்றி கிடந்தளைய பலவீட்டின் கழிவடக்கி
நின்று நடப்பதற்கும் நேர்ந்திடா நிலைகெடுமோ? 1
- எசேக்கியல்
பொருளுரை:
வீட்டின் முன்னிருக்கும் வெளியிடத்தில் அமைந்துள்ள இளமையான பாக்கு மரத்தின் முதிர்ந்த பாளைகளிலிருந்து கள் வடிந்தும், இனிமையான மெல்லிய காற்றும் பரவலாகப் புகுந்து உலவிடும் அழகு மிகுந்த ஊர்களெல்லாம் பல வீட்டின் கழிவுகளில் பன்றிகள் கிடந்து புரள நின்று நிதானித்து நடப்பதற்கு இயலாத நிலை என்று மாறுமோ என்று இப்பாடலின் கவிஞர் மன வருத்தமுடன் கூறுகிறார்