மலரே உன்னை ரசித்தேன் இவளுக்குக் கோபம்
மலரே உன்னை ரசித்தேன்
இவளுக்குக் கோபம்
மாலையே உன்னை ரசித்தேன்
இவளுக்குக் கோபம்
நதியே உன்னை ரசித்தேன்
இவளுக்குக் கோபம்
நிலவே உன்னை ரசித்தேன்
இவளுக்குக் கோபம்
உங்களையெல்லாம் விட்டு விட்டு
ஓர் இனிய மாலையில்
இவளை ரசிக்கத் துவங்கினேன்
இவள் மாறினாள் ஒரு பூந்தோட்டமாய்
நீங்கலெலெல்லாம்
இவளெனும் அழகிய பூந்தோட்டத்தில்
அங்கங்கே நிற்கிறீர்கள் என்பதும் உண்மை !