முத்தமிழ்

மன்னாதி மன்னர்களும்
மதித்துக் காத்த முத்தமிழ்!
மதுரையிலே சங்கம் வைத்து
மாண்புக் காத்த முத்தமிழ்!
மூச்சுப் பிடிக்க பாரதி
முழங்கிக் காத்த முத்தமிழ்!
நாவன்மை காட்டி அண்ணா
நாளும் வளர்த்த முத்தமிழ்!
கரகரத்தக் குரலுடன்
கலைஞர் காத்த முத்தமிழ்!
கண்ணதாசன் மொழியிலே
காதல் வளர்த்த முத்தமிழ்!
வாடாத மல்லியாய்
வாலி வளர்த்த முத்தமிழ்!
வைரமுத்து வரிகளில்
வாழும் எங்கள் முத்தமிழ்!
இன்னும் பல அறிஞர்கள்
இன்றும் காக்க விழைகிறார்!
இருந்தாலும் இனியதமிழ்
வளர்கிறதா இப்போது?
வினாக்கள் ஓர்ஆயிரம்!
விடைகள் யாரறிவார்?
பேரில் மட்டும் தமிழ்நாடு!
ஊரில் உள்ள பள்ளிகளில்
இல்லை இப்போ தமிழ்வழி!
பெற்றவர்கள் எல்லோரும்
விரும்புவதும் அயல்மொழி!
இணையத்தில் மட்டுமே
இயக்கங்கள் அலருது!
உண்மையில் தமிழ்க் காக்க
உள்ளங்கள் மறுக்குது!
பெரியோர்கள் காத்துத் தந்த
மொழியதனை இழக்கின்றோம்!
விளைவுகள் என்னாகும்
எனநினைக்க மறுக்கின்றோம்!
மெல்லத்தமிழ் சாகாமல்
நல்லத்திட்டம் வகுத்திடுவாம்!
வெற்றுக்கூச்சல் இடாமல்
பற்றுடன் தமிழைக் காத்திடுவோம்!

எழுதியவர் : திருமகள் (28-Feb-20, 6:39 am)
சேர்த்தது : திருமகள்
Tanglish : mutthamil
பார்வை : 1981

மேலே