துணைக்கு வந்த தென்றல்

அந்தி சாய் வேளையிலே
தன்னந்தனியாய் நான்
ஒத்தையடி பாதையிலே
அத்தானைத் தேடி போகையிலே
எனக்கு துணைத்தந்து என்னோடு
வந்தது வந்து என்னை என் அத்தானோடு
சேர்த்துவைத்தது ஓர் உறவு
நெருங்காது என்னைக் காத்து சென்றது
அதுவே உருவேதுமிலா உறவு அதுவே
இளவேனிற்கால தென்றல் காற்று

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (7-Mar-20, 2:29 pm)
பார்வை : 274

மேலே