ஆறுதல்

ஆறுதல்
மனது மாசுற்று மயங்கிவிழும் நேரத்திலும் ஆறுதல் வேண்டும்
மலைபோல் முளைத்து மாற்றம் பெறவும் ஆறுதல் வேண்டும்

மக்கிப்போன நிலத்திற்கும்
ஆறுதல் வேண்டும்
அது உரம் தின்று வளமாக
மாறுதல் வேண்டும்

வெப்பத்திற்கும் வேண்டும்
தெப்பத்திற்கும் வேண்டும்
காதலுக்கும் வேண்டும்
காமத்திற்கும் வேண்டும்

காலத்திற்கும் வேண்டும் காலத்துக்கும் வேண்டும்
ஓர் ஆறுதல் வேண்டும்...
-ஜாக்.

எழுதியவர் : ஜாக் (3-Apr-20, 11:45 pm)
சேர்த்தது : ஜெ கணேஷ்
Tanglish : aaruthal
பார்வை : 91

மேலே