பட்டழகே
பட்டுப்பூச்சி பட்டுப்போச்சு...
நூலிழையை விட்டுப்போச்சு..
நூலும் உனக்கென்று நெய்தலாச்சு..
சரிகை கோர்த்து ஜொளிக்கலாச்சு..
தறிக்கெட்டு வளர்ந்த சீலையில்லாமல்
தறி சொல் கேட்டு வளர்ந்த சீலையை நீ அணியலாச்சு...
புடவை உன் உடலோடு பணியலாச்சு..
புடவைக்கு அதுவே புண்ணியமாச்சு...
பட்டுப்பூச்சிக்கு ஆத்மா சாந்தமாச்சு..
உன் பட்டழகை கண்டபிறகே அதன் ஆத்மா சாந்தி அடையப்போச்சு..
-ஜாக்.