மனதை வருடிய மழை

மெல்லிய சாரல்
மனதை வருட

சோகமாய் இருந்த
மனதுக்குள் இயற்கை
அளித்த ஆறுதல்
வருடல்கள்

கருமை நிற
மேகங்கள் பந்து
போல் உருண்டு
கொஞ்சம் கொஞ்சமாய்
தூவி தெளித்த இந்த
சாரல் மழை

நாளை என்ன ?
கேள்வி குறியுடன்
நாட்களை ஓட்டும்
மனதிற்கு

நான்
இருக்கிறேன்
இயற்கை தந்த
கொடை இவள்...

எழுதியவர் : இயற்கை (27-Apr-20, 8:18 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 50

மேலே