ஞானம்

ஞானம்

காதல் அறியான் பாவி கடவுளின்
காதல் படைப்பே மனிதராம் -- பாதகமே
இல்லை கடவுளெனல் அல்ல பகுத்தறிவு
இல்லை அறிவர் கடவுள்

எவன்கண்டான் அந்த எமனை பிரம்மா
எமனும் கடவுளாய் கண்டார் ---- எவராம்
பிறப்பிறப்பு பேசா பிறமதத்தார் சொல்லார்
பிறப்பினில் வேற்றுமை கோடி

நல்லவன் முட்டாள் பொல்லான் அறிவாளி
நல்லுயர் தாழ்ந்த பதவிகள் --- எல்லாமும்
வேற்றுமை தாழ்வுவுயர் ஏற்றிடும் இந்துக்கள்
வேறுயார் கற்றார் உலகில்

பாரதத்தில் ஜாதிமொழி ஏராளம் எல்லோரும்
பார்வதி ஈசன் தொழுதாரே --- காரணம்
மன்னர்கள் எப்படியோ மண்மக்கள் பக்திசீலர்
மண்ணில் விளைந்தது ஞானம்.

எழுதியவர் : பழனிராஜன் (29-May-20, 8:02 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : nanam
பார்வை : 98

மேலே