கிரகணம் பிடித்துக்கொண்டது

கிரகணம் பிடித்துக்கொண்டது...

அவள் கிரகணம் என்னை விழுங்கிக் கொன்றது..
அவள் நிழலில் என் ஒளி மறைந்து நின்றது..

இதில் சந்திர சூரிய சம்மந்தமில்லை..
எந்த மந்திர தந்திர சம்பவமில்லை..

இது பருவ பாய்ச்சலால் பற்றிப்போன
கிரகணம்..
இதயவள் சந்திப்பில் இறந்துபோகும் என் மரணம்...

காதலால் எம்மனம் களவாடப்பட்ட தருணம் ..
இதில் விஞ்ஞானம் இன்னும் பயிற்சி பெற்று வரணும்...

சிறு நேர சந்திப்புதான்
தாக்கமோ தகனம் செய்யும் வரை..
இன்னிகழ்வு
இயற்கையால் இயற்றப்பட்ட பிறப்பு
இது இதிகாசத்தில் இல்லாத சிறப்பு

இது அரிதான ஒன்று..
எனக்கே உரித்தான ஒன்று
வெளிச்சம் இறைத்து ஒளிதந்தாள் சென்று....
-ஜாக்

எழுதியவர் : ஜாக் (2-Jun-20, 8:25 am)
சேர்த்தது : ஜெ கணேஷ்
பார்வை : 59

மேலே