எல்லாம் இப்படித்தான்
வாழ்க்கை ஒரு விசித்திரமான பயணம்
வருவதும் வரப்போவதும் இங்கு புரியாத புதிர்
யூகங்களின் தீர்க்கமான தீர்மானத்தில்
காலம் சற்று கடந்துகொண்டிருக்கிறது ................
இங்கு யாரும் நிரந்தரமாய் தோற்றதும் இல்லை
நிரந்தரமாய் ஜெயித்ததும் இல்லை
மாறிவரும் மாயபிம்பத்திலேயே
வாழ்க்கை மறைந்து போகிறது ...............
எதிரில் புகழ்வதும் மறைவில் இகழ்வதும்
மனிதகுலத்தின் இயற்க்கை
நிரந்தர புகழ்ச்சிக்கும் நிரந்தர இகழ்ச்சிக்கும்
சொந்தக்காரர்கள் யாரும் இல்லை ................
மாறும் அதிகாரத்தைத்தான்
மனிதன் ஆண்டுகொண்டுஇருக்கிறான்
நிரந்தரமானது மாற்றம் என்பதனை
மனிதன் இன்னும் உணரவில்லை ................
கடவுள் கொடுத்த காசு
கடைசிவரை தனக்கே சொந்தமென்று நினைத்து
நியாயத்தை மறந்து வாழும் நியதிகெட்ட
மனிதர்களே அதிகம் .................
ஏற்றமும் இரக்கமும் எல்லோருக்கும் உண்டென்பதை
மறந்த மனங்களால் மானுடம்
நிறைய கடன்காரர்களை உருவாக்கி வைத்திருக்கிறது .................
தனக்கென ஒன்றும் பிறர்க்கென ஒன்றும்
என்று வித்தியாசப்படுத்தியே
நியாயங்களை குழிக்குள் புதைத்து
காலத்தை கடத்தியிருக்கிறது மனித குளம் ..............
அடுத்தவன் அழுகையை ரசிப்பதும்
அவனது வளர்ச்சியை கெடுப்பதும்
மனிதனின் பரிமாணத்தில்
மாறாத செயலாகவே இன்றும் இருக்கிறது ...............
மாறும் மாறும் என்று நினைத்து
காலத்தின் மாற்றத்தில் நாகரீகம் எங்கோ சென்றுவிட்டது
மனிதனின் அடிப்படை குணத்தில்
மாற்றங்கள் இல்லை ...............
எல்லாம் இப்படித்தான் ........................