இசையில் இறைவன்

தன்னை மறந்து இசைக்கலைஞன் சாதகம் செய்கின்றான்
கண்களை மூடி ...... இதய பூர்வமாய்
ஸ்வாசக்காற்றை ஒரு யோகிபோல
தன உதட்டில் கொணர்ந்து
மெல்ல மெல்ல குழலின் துளையில் இறங்குகிறான்
அவன் விரல்கள் பார்க்காமலேயே
குழலில் வரும் காற்றை இசையாய் மாற்றுகிறது
சப்தஸ்வரங்கள் இசை வடிவத்தில்
இப்போது கல்யாணி ரூபமெடுக்கிறது
அவன் கண்களை திறக்கவே இல்லை
சாதகம் முடிந்தது .......
மெல்ல கண்களை திறக்கிறான் கலைஞன்
அவன் வாயில் அம்மா கற்பக வல்லியே
லலிதாம்பிகே .... அம்மா .... அம்மா என்று
லோகமாதாவின் நாமங்கள்....

அவனை.... என் நண்பன் அவனைக் காண
வந்த நான் அசர்ந்து போனேன் ......
அவன் சற்றுநேரம் முன் செய்த சாதகத்தில்
இசை வடிவில் அம்மனை அல்லவா
கண்டு லயித்திருந்தான் .....

நான் அவனை இதைப்பற்றி கேட்க
அவன் சொன்ன பதில்
அந்த இனிய நேரத்தில் என்னை மறந்தேன்
என் முன்னே நான் வணங்கும் தெய்வம்
கற்பகாம்பாள் என்னை ஆட்கொண்டாள்
என்றான்..... என் உடம்பு புல்லரிக்க

இசை தெய்வீகம் .....
இசை இறைவனோடு இணைக்கும்
இது மெய்மொழி
தெய்வீக இசை தேவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Jul-20, 6:45 pm)
Tanglish : isaiyil iraivan
பார்வை : 95

மேலே