முதல் விளக்கு
இயற்கையை வணங்கிப் பழகின
அன்றைய முன்னோர்களுக்கு
ஒளி தந்து வாழ்வளித்த
அகல் விளக்கே—மனிதர்களின்
ஆதார விளக்கென்று நீ
ஆணவம் கொள்ளலாமா !
நல் உள்ளங்களும்
நாடாண்ட மன்னர்களும்
கோயில்களில் உன்னை வைத்து
கும்பிட்டதும் உண்மை தான் ,
ஆதி மனிதர்களின் இருளை
அகற்றியதும் நீ தான்
களி மண்ணால் உருவானாலும்
களி மண் என்று நினைத்து
உன்னை வெறுத்ததில்லை ,
வீசுகின்ற காற்றால்
நீ படபடத்த போதெல்லாம்
கைகொடுத்து உதவி
காத்தது மனிதர்கள் தானே !
இருந்தும் ஏன் இந்த ஆணவம் !
மனிதன் படைத்தான் உன்னை –ஆனால்
மண்ணில் உயிர்களை படைத்தது சூரியன்
வானில் பகல் விளக்காய்
ஒளி தந்து எரியும்போது
முதல் விளக்கு அது தானே !