அவள் அழகு

வில்லாய் வளைந்துளம் வீழ்த்திடு மம்பு விழியழகு
இல்லா திருந்துமே ஈர்த்திடச் செய்யும் இடையழகு
கல்லா தவரையும் கற்றிட வைக்கும் கலையழகு
சொல்லா துருகியே சொட்டிடு மின்பச் சுவையழகே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (28-Jul-20, 9:55 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 323

மேலே