திருச்சி வெயிலே

பருவம் என்ற சொல்லறியா
எம் திருச்சி வெயிலே..
பன்னிரண்டு மாதங்களும்
மக்களை பற்றி எரிக்கிறாய்..
கோடை மழை மேகம் கூட்டம்
உன்னால் ஓடி ஒளிந்ததோ..
நாவில் பட்ட தண்ணி கூட
தொண்டை சேருமுன் காயுதோ..
நெற்றி வேர்வை புருவயிடுக்கில்
ஓடியெம் விழியும் தவிக்குதோ..
கூலி வேலை செய்யும் ஆளை
பார்த்தா எம்மனசு கலக்குது..
உன் சூடு பட்டு தார் ரோடும்
சாம்பார் போல கொதிக்குதோ..
காவிரி மண்ணுதன் தாகம் தீர்க்க
கானல் நீர் குடிக்குதோ ஆனா..
பின்னி எடுக்குமுன் சூட்ட பார்த்து
பெரிய கடை வீதி மிரளல...
இரவில் கூட நீ தூங்க மறந்து
எங்கள காந்து கொல்லுற...
கத்திரி போய் நாலு நாளாச்சு
கொஞ்சம் கருணை காட்டுப்பா..
----------------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (17-Aug-20, 2:31 pm)
சேர்த்தது : Sam Saravanan
பார்வை : 282

மேலே