பாடல் தேடலை விட்டது

எம் சோகங்களுக்கு சுளுக்கெடுத்த
இசை கலந்த காற்று திசை மாறிப்போனது

மூச்சடக்கி வந்த ஒரு பாடல்
மூச்சிழந்து போனது

சாலையோர கடைகளில் ஒலித்த
சோலைக்குயிலின் குரலுக்கு
மாலையிட மனித கூட்டம்

புகழுக்கும் பணத்திற்கும் அதிராத மனம்
புரியாத புதிர்தந்து போனது

வாடை காற்றோடு கலந்து காது வருடிய பாடல்
பாடைநோக்கி பயணப்பட்டது

வான கிணறு நோக்கி
வற்றாத இசைகுடிக்க
பற்று கொண்டு பறந்தது

அலுவலக சோர்வையெல்லாம்
அழுக்கு நீக்கிய அன்பு குரல்
ஆகாய வீடு வேண்டி
மாயமாய் போறதென்ன

இனி உன்குரல் ஒலிக்கும் போதெல்லாம்
பனித்த கண்களுக்கு பஞ்சமுண்டோ
இனித்த குரலோனே இனி யாம் உமைகானா
தனித்து வாழ்வதுதான் தமிழகத்தின் தலைவிதியோ

எழுதியவர் : இளவல் (28-Sep-20, 11:16 am)
சேர்த்தது : இளவல்
பார்வை : 83

மேலே