செம்மல் கவிதை படி
கம்பன் கயல்மீன்துள் ளும்கா விரிநாடன்
அம்பெய்யும் வல்லான்கோ தண்டனின் ராமகாதை
கொம்புத்தேன் தீஞ்சுவை பாவிருத்தத் தில்சொன்னான்
செம்மல் கவிதை படி !
கம்பன் கயல்மீன்துள் ளும்கா விரிநாடன்
அம்பெய்யும் வல்லான்வீ ரன்காதை --செம்மலும்
கொம்புத்தேன் தீஞ்சுவை பாவிருத்தத் தில்சொன்னான்
செம்மல் கவிதை படி !
செம்மல் ---வீரச்செம்மல் ராமனையும் கவிச் செம்மல்
கம்பனையும் குறிக்கும்படி அமைக்கப் பட்டிருக்கிறது
----முறையே இன்னிசை நேரிசை வடிவில்