உனக்கான அந்த நொடிகள்
உன்னோடு இருகை இணைந்திட இருவிழி
இணைத்திட இருஉயிர் இணைந்திடாதோ ?
இருமனம் இணைந்திடும் அந்நொடிக்காக
ஒருயுகம் வாழ்வேனடி
இந்நொடி நிலைக்காதோ ?
என வார்த்தைகளின்றி கண்கள் பேசிக்கொள்ளும் தருணம்
நானும் என் வாய்மொழி மறந்து சற்றே ஊமையானேன் !!!
ஏனோ ?சற்றே மௌனம் காத்தது நம் கைகள் .
பின் தழுவிய என்கைகளை விட்டுவிடாதே என
இறுக்கப்பிடிக்க ஏனோ கைகளில் போராட்டம் நீண்டது
சற்றே கைகள் நழுவிட கண்கள் போராடத்துடித்தது .
கணைகள் பல தொடுத்து
எனை களவாட துடித்த உன்னை
விடுவிக்க மனமில்லாமல் என்னிரு கைகளால் உன்னைப்பற்றி
அணைத்திட துடிக்கும் ஒரு இதயம், நான் என்று என் ஒவ்வொரு
துடிப்பிலும் தூது அனுப்பினேன் நான் .
இனி அந்நொடிதாங்கி நொடிப்பொழுதும் வாழ்வேனடி உனக்காக நான் .
உனக்காக அந்த நொடிகள் என்றும் சுகமானது .