மெய்மை காத்திருக்க வேண்டும்
காரணமின்றி என்னிடம்
காழ்ப்பு உனக்கு
காலம் ஒருநாள்
உண்மை உணர்த்தும்
மெய்மை காத்திருக்க வேண்டும்
உண்மை தெரியவர
குற்ற உணர்வு
உன்னை கொத்தி தின்னும்
அவ்வப்போது
ஆசை வந்தால்
அசை போட்டு
வார்த்தை நெருப்பை
வாரிக் கொட்டுகிறாய்
அருமை சகோதரமே
அப்பாவை அனுப்பிவிட்டு
அன்றே செத்து விட்டேன்
மீண்டும் மீண்டும்
சவத்தை சாடும் நீங்கள்
மனிதரா மிருகமா