மழை
ஏர்பூட்டிய உழவனோ
ஏக்கமாய்த்தான் எதிர்பார்க்க
கண்கலங்கிட வான்மகளோ
விண்ணைவிட்டு மண்ணை சேர
ஏரியினை தூர்த்தவனோ
ஏக்கர்கணக்கில் ஏலமிட்டான்
அடுக்கடுக்காய் வீடுகட்டி
அண்ணார்ந்து இருந்தவனோ
மழையைத்தான் ரசித்தானே
மழைக்கும் வெயிலுக்கும்
மறைவாக நின்றவனை
மரம்நடத்தான் மன்றாட
மணிபிளான்ட்டை நட்டுவிட்டு
மார்தட்டி நின்றானே
கானகத்தை அழித்தவனோ
காகிதத்தில் அச்சடித்தான்
மரத்தை காப்போம் மழைபெறுவோமென்று
மாட்டிற்கும்
மதமுண்டு மரத்திற்கு யார் உண்டு
இன்றோ மண்குடிக்க நீரில்லை
மரம்வளர்க்க நாதியில்லை
மாசுற்கு இங்கு இடமுண்டு
மாஸ்க்கோடு வலம்வந்து
மாற்றான் முகம் மறந்து
மண்ணிலே வாழ்கிறோம்
மண்ணில் மூழ்கும்வரை
- இணையத்தமிழன்