சிரிப்புத்தான் எத்தனை வகை
சிரிப்புத்தான் எத்தனை வகை
சிதறி தெறிக்கிறது
இளங்குமரியின் சிரிப்பு
அருகில் எங்கோ
அவளுக்கு பிடித்த
ஆண் மகன்
இருக்கவேண்டும்
பொக்கை வாயால்
பொங்கிய சிரிப்பு
ஓய்வு ஊதியம் அதிகம்
அதிகமாய் வருமென
செய்தி வந்துள்ளது
கெக்கலிட்டு அழைத்த
சிரிப்பு அம்மாவை
ஏமாற்றிய குழந்தை
எதிரே வந்தவன்
தடுக்கி விழ
தடுக்க முடியாத
தவித்திட்ட சிரிப்பு
அதிரவைத்த அதிரடி
சிரிப்பு எதிரே
திரையில் யாரோ
நகைச்சுவையாய் நடிக்கிறார்
அடுக்கடுக்கான சிரிப்பு
ஆனந்த சிரிப்பு
கண்களில் வழியும்
கண்ணீர் சிரிப்பு
சிரிப்பு மட்டும்
நம் வாழ்க்கையையும்
பிறர் மனதையும்
மாற்றும் மருந்து