மறுசுழற்சி செய்து
எல்லாம் இயந்திரமயம் இனிவுலகில்
மண்ணை மந்திரத்தால் சீனியாக்கும்
மாயவித்தை போல் இயந்திரங்கள்
மளமளவெனவே பெருகும் உணர்வீரே
கதிரில் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு
கலையான உணவுகள் ஆக்கப்பட
கண்டுபிடிப்புகள் அறிவியலில் உண்டாகி
காக்கும் காலமும் இனிவரும் உணர்வீரே
மலத்தை மறுசுழற்சி செய்து வைத்து
மறுபடியும் அதனை உணவாக்கும்
மாபெரும் இயந்திரங்கள் கண்டுபிடித்து
மண்ணில் தோன்றி வலம்வரும் உணர்வீரே
கல்லையும் மண்ணையும் கலவையாக்கி
களிபோல கிண்டி உணவு என்றே
கனிவுடன் செய்து வைக்க இயந்திரமும்
கண்டுபிடித்து வலம் வரும் காண்பீரே.
______ நன்னாடன்