காதல் தோல்வி

கல்வியில் தோற்றவர்கள்
மறு தேர்வு எழுதி
வெற்றி பெறலாம் ...!!

ஆனால்...
காதலில் தோற்றவர்கள்
மறு தேர்வு எழுத
வாய்ப்பு கிடையாது ...!!

காலங்கள் கடந்தாலும்
காதலில் தோற்றவர்கள்
என்றுமே ...
தோற்றவர்கள் தான்..!!

சிலருக்கு மனம் மாறி
புதிய காதல் பிறக்கலாம்
இருந்தபோதும் ...
இழந்த காதலை
மனம் என்றும் மறக்காது

பாதைகள் மாறினாலும்
பயணங்கள் முடிவதில்லை
என்பது போல்

காதல் தோல்வியின்
நினைவுகள்
உணர்வுகள் இருக்கும் வரை
அழிவதில்லை
தொடர் கதைபோல்
தொடர்ந்து வரும் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (3-Mar-21, 1:22 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal tholvi
பார்வை : 423

மேலே