காதலிக்கும் ஆண் பெண்

காதலிக்கும் ஆண் பெண் இருபாலரும்
கடமைக்குரியதை எண்ணிய பின்னால்
குடும்பத்தில் இணைவதற்கு முயன்றால்
பிணக்குகள் இன்றி மகிழ்ந்து வாழலாம்

கதையில் தோன்றும் கற்பனை நபர்கள்
காதலிக்கும் நிகழ்வினை எண்ணினால்
தினசரி வாழ்வில் பூசல்கள் தோன்றி
தீயில் கருகிய சருகாய் வாழ்வு ஆகுமே

பதின்பருவத்து பிள்ளைகள் யாவரும்
பருவத்தின் கிளர்ச்சியின் எழுச்சியால்
பாலின ஈர்ப்பினால் தடம்மாறி கவிழ்ந்து
பெருந்துன்பத்தில் வீழ்ந்தே மாளுவர்.

ஒருவரின் உழைப்பின் ஊதியம் இந்நாளில்
ஒருவருக்கே அடிப்படை தேவையை முழுவதுமாய்
நிறைவடையச் செய்ய உதவாதே - இந்நிலையில்
இருவரோடு ஒருகுழந்தைக்கு எங்ஙனம் ஈடேற்றும்

காமம் மிகுந்த கவர்ச்சியில் காதலித்தால்
சோகஞ்சூழ்ந்த துன்பத்தின் சிக்கிக்கொண்டு
வாலிப காலத்தில் வன்ம பகைக் கொண்டு
காலனின் கட்டளைக்கு வாழ்வு பலியாகும்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (9-Mar-21, 10:39 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : kathalikkum an pen
பார்வை : 61

மேலே