தாய்மை
தாய்மை
அழகிய பாதங்கள் நோகுமோ எனக்குழந்தையை
ஆசையுடன் வாரி அரவணைத்து அன்புடன்
இன்னிசைப் போல் ஒலிக்கும் சொற்களை கூறி
ஈன்றவள் வாஞ்சையுடன் செய்யும் செயல்கள்
உதிரத்தில் உணவளித்த உணர்வுகள் பொங்கிட
ஊமையாக நிற்க வைத்த மகவின் கள்ளப்பார்வை
எங்கும் நிறை இறை படைப்பின் அதிசயமே
ஏங்கும் பலருக்கு அவ்வருள் இல்லாமல் தவிக்க
ஐம்புலனையும் மகிழ வைக்கும் மழலைச் செல்வம்
ஒருமுறை அம்மா என அழைக்க உடல் சிலிர்க்கும்
ஓய்வில்லாமல் மகவின் உயர்வையே நினைக்கும்
தாய்மைக்கு நிகர் இல்லை என தலை வணங்குவோம்